OMR Sheet எப்படி நிரப்புவது
OMR SHEET இல் சில அப்டேட்டுகள் TNPSC விட்டிருக்காங்க, அது என்னவென்றால் OMR SHEET பழையபடி இல்லாம புதுசா அப்டேட் பண்ணி இருக்காங்க . பழைய OMR SHEET எல்லாம் கொஸ்டின் நம்பர் எழுதுனா போதும் உங்க கையெழுத்து இருந்தா போதும்.
ஆனால் இப்ப அதுல ஒரு சில அப்டேட்டை கொடுத்து கொஸ்டின் நம்பர் எழுதி அதுக்கு கீழே கட்டம் கொடுத்திருப்பாங்க, அந்த நம்பருக்கு நேரா சேட் பண்ற மாதிரி புது அப்டேட் கொடுத்து இருக்காங்க.
இப்ப, உதாரணத்துக்கு நீங்க A கொஸ்டின் அதிகமா போட்டு இருப்பீங்க அதை எல்லாம் கூட்டி A -க்கு நேரா கீழ பாக்ஸ் கொடுத்து இருப்பாங்க அதுல நீங்க எத்தனை A ஆன்சர் பண்ணி இருக்கீங்கன்னு எண்களிலும் எழுதி அந்த எண்ணுக்கு நேரா சேட் பண்ற பாக்ஸ் கொடுத்து இருப்பாங்க அதையும் நீங்க பண்ணனும்.
அதேபோல B அன்சர் எவ்வளவு ஆன்சர் பண்ணிங்களோ அதை எல்லாம் கூட்டி கீழ பாக்ஸில் புல் பண்ணனும், இப்ப ஒட்டுமொத்தமா A எவ்வளவு B,C,D எவ்வளவு என்று கூட்டி அதை பாக்ஸ்ல 200க்கு எத்தனை என்று FULL பண்ணி அந்த நம்பருக்கு நேரா சேட் பண்ணனும், இப்படி ஒரு அப்டேட்டை TNPSC கொடுத்திருக்காங்க அதுமட்டுமில்லாம இந்த FULL பண்ற OMR சீட்டில் ஏதாவது தவறு இருப்பின் மார்க் ல 2 மார்க் இல்ல 5 மார்க் குறைக்கப்படும் என்று அறிவிச்சிருக்காங்க.
இந்த OMR SHEET கீழ உங்க SIGNATURE மற்றும் LEFT கட்டை விரல் கைரேகை வைப்பாங்க அதே மாதிரி OMR சீட்டுக்கு பின்னாடி உங்க சைன் ஒன்னு வாங்குவாங்க இதுதான் அடிப்படை செயல்முறை , இப்ப OMR SHEET லிங்க் கீழே கொடுத்து இருக்கேன் டவுன்லோட் பண்ணிக்கோங்க அதை ஒவ்வொரு தடவையும் எழுதி எழுதி செக் பண்ணுங்க அப்பதான் உங்களுக்கு எக்ஸாம் வரும்போது Useful லா இருக்கும். OMR SHEET எப்படி fill பண்றது என்ற காணொளி காணவேண்டும் என்றால் comment பண்ணுங்க வீடியோ போடுறேன் செக் பண்ணுங்க.
OMR SHEET பற்றிய முழு விவரம் :
குறிப்பு :
தேர்வு வினா விடை தாள் கொடுப்பதற்க்கு முன்பு OMR SHEET தேர்வர்களுக்கு தரப்படும். OMR SHEET - யை fill பண்ணுவதற்க்கு முன்பு OMR SHEET - ன் பின்புறம் அறிவுரைகளை நன்கு படிக்க வேண்டும். பின்னர் வினா தாள் கொடுக்கப்படும். வினா தாளில் வினா எண் கொடுக்கப்பட்டிருக்கும் . அதை OMR SHEET -ல் உரிய இடத்தில் நிரப்புதல் வேண்டும் . அவற்றை எப்படி நிரப்புவது என்று பின் வரும் அறிவுரைகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
OMR SHEET -யை எப்படி நிரப்ப வேண்டும் அறிவுரைகள் :
1. விண்ணப்பதாரர்கள் பக்கம் II உள்ள அறிவுரைகள் அனைத்தையும் படித்துவிட்டு பக்கம் இரண்டின் வலது புறம் கீழே உள்ள கட்டத்தில் தேர்வுக்கு முன் கையொப்பமிட வேண்டும் மேலும் தேர்வு முடிந்த பிறகு அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விட்டு பக்கம் 1- ன் பகுதி II உரிய இடத்தில் கையொப்பமிடவும்.
குறிப்பு: தவறினால் உங்கள் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.
2. விடைத்தாளை பயன்படுத்துவதற்கு முன்பு பகுதி II l அவற்றில் அச்சிடப்பட்டுள்ள உங்களுடைய பதிவு எண் பெயர் நிழற்படம் பதவியின் பெயர் தேர்வு பாடத்தின் பெயர் மற்றும் தேர்வு கூடத்தின் பெயர் ஆகியவை அனைத்தும் சரி பார்க்கவும் அச்சிடப்பட்ட விவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை உடனே அரை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
3. அனைத்து விவரங்களையும் எழுதுவதற்கும் நிரப்புவதற்கும் கருமை நிற மையுடைய பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது (கருப்பு பால் பாயிண்ட் பெண்).
4. பகுதி I இவற்றில் எந்த இடத்திலும் நீங்கள் கையொப்பமிடக்கூடாது. ஆனால் தேர்வு முடிந்த பின்னர் உங்களது இடது கை பெருவிரல் ரேகை பதிவினை பகுதி I கீழ்பாகத்தில் உரிய இடத்தில் பதிக்க வேண்டும்.
5. குறிப்பு :
தேர்வு முடிந்த தேர்வர்கள் அவர்களது இடது கை பெருவிரலில் ரேகை பதிவினை விடைத்தாளில் அதற்கான உரிய கட்டத்தில் இடவேண்டும் அவ்வாறு இல்லையெனில் தேர்வர் பெற்ற மொத்த மதிப்பெண்களில் இருந்து 2 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
6. விடைத்தாளில் எந்த பக்கத்திலும் ட்ராக் பகுதி உட்பட தேவையற்ற குறிப்புகள் எழுதுவதோ அல்லது கிறுக்குவோதோ குறியீடுகள் செய்வதோ கூடாது விடைத்தாளில் உள்ள பட்டை குறியீடு அதாவது ( சைடுல பாத்தீங்கன்னா பார்கோட் இருக்கும் அதை எக்காரணத்தைக் கொண்டும் சேதப்படுத்தக் கூடாது. ) விடைத்தாளில் தேவையற்ற குறிப்புகள் குறியீடுகள் இருந்து அவை விடைத்தாளில் நேரடி ஆய்வில் கண்டறியப்பட்டு குறியீடுகள் உங்களது அடையாளத்தை வெளிப்படுத்துவதாக இருப்பின் உங்களது.
7. பிரிவு II -ல் வினா தொகுப்பு எண்ணை சரியாக எழுதி அதாவது ( கொஸ்டின் புக்லெட் எண் ) அதற்குரிய வட்டங்களை நிரப்ப வேண்டும் நீங்கள் எந்த வட்டங்களை நிரப்பியுள்ளீர்களோ அதுவே இறுதியானதாகும். வினா தொகுப்பு எண்ணிற்கான வட்டங்கள் நிரப்பப்படாமல் விடுபட்டிருந்தால் உங்களது விடைத்தாள் செல்லாது ஆக்கப்படும் வினாத்தாள் தொகுப்பு என் முறையற்று நிரப்பப்பட்டிருந்தால் அல்லது வினாத்தாள் தொகுப்பு எழுதுவதற்காக வழங்கப்பட்ட கட்டங்களில் எழுதப்படவில்லை எனில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் இருந்து ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
8. ஒவ்வொரு கேள்விக்கு விடை அளிக்கும் போது ஒரே ஒரு சரியான விடையினை மட்டுமே நிரப்ப வேண்டும் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால் (E) என்பதை நிரப்ப வேண்டும். OMR விடைத்தாளில் எந்த ஒரு வினாவிற்கும் அது தொடர்பான எந்த ஒரு வட்டமும் நிரப்பப்படாதிருந்தால் தேர்வுகளால் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களில் இருந்து இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
9. விடைத்தாளின் பிரிவு III-ல் எத்தனை As Bs Cs Ds Es விடையாக குறித்து குறித்துள்ளீர்கள் என கணக்கிட்டு மொத்த எண்ணிக்கையினை அதற்குரிய கட்டத்தில் எழுதுவதுடன் அதற்குரிய வட்டங்களையும் நிரப்ப வேண்டும் (எடுத்துக்காட்டு) OMR விடை தாளில் பகுதி-I ல் 36 As விடையாக நிரப்பப்பட்டிருந்தால் பிரிவு III (a) இல் வழங்கப்பட்ட கட்டங்களில் 036 என எழுத வேண்டும்.
மற்றும் பிரிவு II (b) இல் அதற்குரிய வட்டங்கள் 0,3 மற்றும் 6 மேலே விளக்கப்பட்டுள்ளபடி நிரப்ப வேண்டும். As + Bs + Cs + Ds +Es ஆகியவற்றின் நிரப்பப்பட்ட வட்டங்களின் மொத்த எண்ணிக்கையானது வினாத்தாளில் அச்சிடப்பட்ட மொத்த வினாக்களின் எண்ணிக்கைக்கு சமமானதாக இருக்க வேண்டும்.
இப்பணிக்காக மட்டும் தேர்வு நேரத்திற்கு பிறகு 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்படும் இந்த As Bs Cs Ds Es பற்றிய குறிப்புகளில் ஏதேனும் வேறுபாடு இருப்பின் நீங்கள் பெரும் மொத்த மதிப்பெண்களில் இருந்து 02 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
10. விடைத்தாளில் பிரிவு IV மற்றும் V அரை கண்காணிப்பாளரால் நிரப்பப்பட வேண்டும். பகுதி I மற்றும் II , பிரிவு V தேர்வர் வந்திருந்தால் (P) என்ற வட்டத்தினையும் தேர்வர் வரவில்லை என்றால் (A) என்ற வட்டத்தினையும் தேர்வு அறை கண்காணிப்பாளர் கருப்பு நிற மைக் கொண்ட பந்து முனை பேனாவால் மட்டுமே நிரப்ப வேண்டும். மேலும் தேவர் தேர்வுக்கு வரவில்லை எனில் பகுதி I உள்ள பிரிவு I சிவப்பு நிற பந்து முனை பேனாவால் குறுக்கு கோடிட்டு அடித்து கையொப்பமிட வேண்டும். பிரிவு IV இல் அரைக் கண்காணிப்பாளர் தேர்வரால் பிரிவு III (b) ல் குறிப்பிடப்பட்டுள்ள அதே As Bs Cs Ds Es ஆகியவற்றின் எண்ணிக்கைகளை அதற்குரிய கட்டங்களில் எழுதி Total என்ற கட்டங்களில் மொத்த எண்ணிக்கையும் குறிப்பிட வேண்டும்.
11. அனைத்து வினாக்களும் ஏதேனும் ஒரு வட்டத்தை நிரப்பியுள்ள விவரங்களை உறுதி செய்த பின்னர் பகுதி I கீழ் புறத்தில் அரை கண்காணிப்பாளர் தனது கையப்பத்தினை இட வேண்டும்.
12. விடைத்தாளில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக நிரப்பப்பட்டு உள்ளதா என்று உறுதி செய்வது உங்களின் பொறுப்பாகும்.
உறுதிமொழி
தேர்வு கூட நுழைவுச்சீட்டு மற்றும் விடைத்தாளில் உள்ள அறிவுரைகள் அனைத்தையும் படித்து அறிந்து கொண்டேன் என உறுதி அளிக்கிறேன். மேலும் விடைத்தாளின் பக்கம் 01ன் பகுதி I & பகுதி II ல் நான் செய்த பிழைகள், தவறுகளுக்கு ( மதிப்பெண்கள் குறைத்தால் செல்லாதாக்குதல் விதிக்கவும் ஒப்புக்கொள்கிறேன் )
முடிவு:
மேலே உள்ள அறிவுரைகளை படித்து OMR SHEET எப்படி பயன்படுத்த வேண்டும். என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் TNPSC தேர்வில் வெற்றி பெற உங்களை வாழ்த்துகிறது,
SK EDUCATION TAMIL
OMR SHEET DOWNLOAD
0 கருத்துகள்