![]() |
சங்க கால சிற்பக்கலை |
சங்க காலம் - ஆரம்பம் முடிவு வரையறை
தமிழ் நாட்டில் தலைச்சங்கம் , இடைச்சங்கம் , கடைச்சங்கம் , என்ற மூன்று சங்கங்கள் இருந்து தமிழை வளர்த்து வந்தன என்று கூறுகின்றன. தலைச்சங்கம் தென் மதுரையிலும், இடைச் சங்கம் கபாடபுரத்திலும், கடைச்சங்கம் இன்றைய மதுரையிலும் நிறுவப்பட்டன. இக்காலங்களில் தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றி தமிழுக்குப் பெருமை சேர்த்தனர். சங்கம் என்ற சொல்லுக்கு புலவர்களின் ஒருங்கிணைந்த அமைப்பு என்று பொருள்படும். இச்சொல் வடமொழியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. முதன் முதலாகச் சங்கம் என்ற சொல் தான் காணப்படுகிறது. சங்கம் என்ற சொல் பிற்காலத்தைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். சங்கங்களைப் பாண்டிய மன்னர்கள் போற்றி வளர்த்தனர். இச்சங்கங்கள் வளர்ச்சி பெற்றிருந்த காலத்தைத்தான் சங்க காலம் என்றழைக்கிறோம். சங்க காலம் எது என்று நிர்ணயம் செய்வதில் வலாற்றுஆசிரியர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
சங்க கால ஆரம்ப வரையறை
சங்க
காலத்தின் ஆரம்பத்தினை பற்றியும், அதனுடைய காலத்தினை பற்றியும் அறிந்து கொள்வதற்க்குக் கல்வெட்டுகள் உதவி செய்கின்றன.
தமிழ்நாட்டின்
பல இடங்கக்களில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகள் தமிழகச் சான்றுகளில் மிகவும்
பழமையானது ஆகும்.
அந்த கல்வெட்டுகளின் காலம் கி. மு 2-ம்
நூற்றாண்டு என மொழியில் வல்லுனர்கள் மூலமாகவும், கல்வெட்டு
அமைப்புகளின் வளர்ச்சியினைக் கண்டுபிடிப்பவர்களின் மூலமாகவும் நிர்ணயம்
செய்யப்படுகிறது. பிராமிக் கல்வெட்டுகளுக்கும்
தொன்மையான கல்வெட்டுக்களோ, இலக்கியக் குறிப்புகளோ
கிடைக்கப் பெறவில்லை. எனவே சங்க காலத்தின் தொன்மைக்
காலம் கி. மு . மூன்றாம் நூற்றாண்டு என உறுதி செய்யப் படுகிறது. இந்தக்கால வரையறை
மேலும் சில கல்வெட்டுக்களின் மூலம் தெளிவாக்கப்படுகிறது.
சேர சோழ பாண்டியர் |
அசோகரின் கல்வெட்டுக்களின் காலம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு ஆகும். இக்கல்வெட்டுகளில் தமிழகதிலுள்ள சேர, சோழ,பாண்டியன் அரசுகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே தமிழ்ச்சங்கமும் அக்காலத்தில் இருந்திருக்க கூடும் என்று கருத முடிகிறது.
கலிங்க மன்னன் காலவேலவன் கி.மு.2-ம் நூற்றாண்டின் பிற்ப்பகுதியில் ஆட்சிபுரிந்தவன் ஆவான்.
அவன் வெளியிட்ட ஹதிகும்பா கல்வெட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்கது
ஆகும். அதன் காலம் கி. மூ. 155 ஆகும்.
இதில் 113 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட தமிழ் அரசுகளின் கூட்டமைப்பு பற்றியும் , அதனைக் காரவேலன் வெற்றி கொண்டது பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
இதிலிருந்து, தமிழக அரசுகளின் தோற்றம் 113
ஆண்டுகளின் முன்பாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
எனவே சங்க காலத்தின் ஆரம்ப காலம் கி.மு.3-ம்
நூற்றாண்டு எனத் தீர்மானிக்கப்படுகிறது.
சங்க காலத்தின் முடிவு கால வரையறை
சங்ககால முடிவு பற்றிய வரையறைகளை இலங்கை நாட்டின் இலக்கியமான
மகாவம்சமும் மற்றும் சிலப்பதிகாரமும் விலகங்குகின்றன.
சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் என்ற மன்னன்
கண்ணகிக்கு எடுத்த விழாவின் போது, இலங்கை மன்னன் கயவாகு
கலந்து கொண்டு சிறப்பித்தான் என்று குறிப்பிடுகிறது. இலங்கை நாட்டை சேர்ந்த
மகாவம்சம் என்ற நூலும் கண்ணகிக்கு எடுக்கப்பட்ட விழாவில் கயவாகு கலந்து கொண்டான்
என்று குறிப்பிடுகிறது. மகாவம்ச நூலினை
ஒழுங்குப்படுத்தியவர்கள், கயவாகு என்ற மன்னன் கி.பி .180,198-ம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்திருக்க வேண்டும் என்று
கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே சேரன்
செங்குட்டுவனின் காலம் இரண்டாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதி என்று முடிவாகிறது.
இதுவே கடைச் சங்கத்தின் காலம் என்று நிர்ணயித்துக் கொள்ளலாம்.
இதுதவிர எட்டுத்தொகை , பத்துப்பாட்டு போன்ற
இலக்கியங்களில் குறிக்கப்படும் துறைமுகப்பட்டினங்களான கொற்கை, முசிறி, புகார் ஆகியவற்றின் இருப்பிடங்கள் பற்றியும்,
ரோமானியா பயணிகளான பிளினி, டாலமி போன்றவர்கள்
கூறுகின்றன. அவர்களுடைய காலம் கி.பி. 2-ம் நூற்றாண்டு ஆகும். எனவே சங்க காலத்தின்
இறுதி வரையறையை கி.பி. 2-ம நூற்றாண்டாகக் கருதலாம்.
சங்க கால இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்து என்ற
நூலில் உள்ள பதிகங்கள் ஒவ்வொரு சேர மன்னனை பற்றியும் குறிப்புகள் தந்துள்ளன. அந்தப் பதிகங்களில் தரப்பட்டுள்ள மன்னர்களைக்
கீழ்க் கண்டவாரு முறைப்படுத்தலாம்.
( உதயன் சேரல், * இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,
* பல்யானை செங்கெழுகுட்டுவன் , * களங்காயக்
கண்ணி நார்முடிச்சேரல், * செங்குட்டுவன் , * ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் , * செல்வக்கடுங்
கோவாழியாதன் , * பெருஞ்செரல் இரும்பொறை ,* இளம்சேரல் இரும்பொறை . )
மேற்கண்ட அரசர்களில் செங்குட்டுவனது காலம் கி.பி.
இரண்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர்
4 அரசர்கள் ஆட்சி புரிந்திருக்கின்றனர் . ஒவ்வொரு அரசனும் சராசரியாக 25 ஆண்டுகள்
ஆட்சி புரிந்தனர் என்று எடுத்துக்கொண்டால் , கி,பி, 3 ஆம் நூற்றாண்டில் சேர மன்னர்களின் ஆட்சி
முடிவடைகிறது . இதுவே சங்க கால முடிவு என கூறலாம் .
இவ்வாறு சங்க காலத்தின் துவக்க காலம் கி. மு. 3 ஆம்
நூற்றாண்டு எனவும் , அது முடிவுற்ற காலம் கி.பி. 3 ஆம்
நூற்றாண்டு எனவும் ஆதாரங்கள் மூலமாக நிர்ணயம் செய்யப்படுகிறது .
------------------------------------------------------------------------------------------------
Download PDF File 👈
Click Here Download
0 கருத்துகள்