இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களில்
தோற்றம் பற்றிய விவரங்கள்
முதன் முதலில் சோவியத் குடியரசின் ஆட்சியாளர் ஜோசப் ஸ்டாலின் ஐந்தாண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இதனைப் பார்த்து இதன் மூலம் கவரப்பட்ட முதல் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் 1951இல் இந்தியாவில் ஐந்தாண்டு திட்டம் (Five Year Plans in India ) என்ற கருத்தை நடைமுறைப்படுத்திட திட்ட கமிஷனை தோற்றுவித்தார். இது தேசிய பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் ஆகும். இந்தத் திட்ட கமிஷனுக்கு பிரதம மந்திரியை தலைவராக கொண்ட ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது. திட்ட கமிஷன் துணைத் தலைவர் அரசரால் நியமிக்கப்படுகிறார். 1951 முதல் 2012 ஆம் ஆண்டு முடிய 11 ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன 2014 ஆம் ஆண்டில் திரு நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றபின் ஐந்தாண்டு திட்டங்களை வகுக்கும் பொறுப்பை கவனித்த தேசிய திட்டக் குழு கலைக்கப்பட்டு அதற்கு பதில் சிந்தனை மையம் என்ற இந்தியா என்னும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
* இது நிதி ஆயோக் என்று அழைக்கப்படுகிறது.
முதலாம் ஐந்தாண்டு திட்டம்:
1951 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை நீடித்த இத்திட்டம் வேளாண்மையை மேம்படுத்துவதற்கு முதலிடம் கொடுத்தது கனரகத் தொழில்கள் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன அரசியலமைப்பு கூறும் நலம் நாடும் அரசு ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன முதலாம் ஐந்தாண்டு திட்டம் டோமர் வளர்ச்சி படிமத்தை பின்பற்றியது.
* உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) உதவியுடன் குழந்தைகள் நலம் காக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
* பல்கலைக்கழக மாநில குழு தோற்றுவிக்கப்பட்டது.
* இத்திட்ட காலத்தில் இறுதியில் இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
* பள்ளிக் கல்வியை பொறுத்தவரை அனைவருக்கும் கட்டாய தொடக்க கல்வி அளித்திடவும் ஆதாரக் கல்வி முறையை தேசிய கல்வி முறையாக ஏற்று அதனை அமல்படுத்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
* தொடக்க கால கல்வி வசதிகளை விரிவுபடுத்துதல் ஏற்கனவே உள்ள வளர்ச்சியை நிலைப்படுத்துதல் பெண் கல்விக்கு ஊக்கம் அளித்தல் போன்றவை திட்டத்தின் இலக்குகளாக குறிப்பிடப்பட்டன இத்திட்ட காலத்தில் ஏற்பட்ட வேண்டிய புயலவுகளும் குறிப்பிடப்பட்டன உதாரணமாக தொடக்க கல்வி நிலையில் ஆறு முதல் 11 வரை பள்ளி குழந்தைகள் 60% உயர்நிலைப் பள்ளி நிலையில் உள்ள வைத்தியர் 11 முதல் 14 வயதுடைய 15 சதவீதம் அவரவர் நிலைக்கேற்ற கல்வி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டன.
2 வது ஐந்தாண்டு திட்டம்:
* இத்திட்டமானது 1956 முதல் 1961 வரை நடைபெற்றது திட்டம் இந்திய பொருளாதார நிபுணரின் வளர்ச்சி படிமத்தை பின்பற்றியது.
* புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டம் வடிவமைக்கப்பட்டது.
* இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் கனரக தொழில்களுக்கு முன்னுரிமை அளித்தது.
* ரஷ்யா, பிரிட்டன் ஜெர்மனி, ஆகிய வெளிநாடுகளில் உதவியோடு நீர் மின் சக்தி திட்டங்களும் ரூர்கேலா மற்றும் பிலாய், துர்க்காபூர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் இரும்பு உருக்கு ஆலைகளும் தோற்றுவிக்கப்பட்டன.
* நாட்டை விரைந்து தொழில் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
* இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 48 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
* இந்திய புள்ளியல் நிறுவனம், அணுசக்தி கழகம் மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் போன்ற மதிப்பீட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.
* இத்துறையை பொருத்தவரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் ஆதார கல்வியை மேம்படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் தொடக்க கல்வியை விரிவு படுத்துதல் உயர்நிலை பள்ளி நிலையில் பல தொழில் பாடங்களை கற்பிக்க ஏற்பாடுகள் செய்தல் உயர் கல்வியில் தர உயர்வுக்கு முயற்சித்தல் தொழில்நுட்ப கல்வி வாய்ப்புகளை பெருக்குதல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
3 வது ஐந்தாண்டு திட்டம்:
* இந்த திட்டம் 1961 முதல் 1966 வரை.
* இத்திட்டம் வேளாண்மை உற்பத்திக்கும் முதலிடம் தந்தது எனினும் இந்திய சீன யுத்தம் 1962 பாகிஸ்தானுடன் போர் 1965-1966 1965ல் ஏற்பட்ட கடுமையான வறட்சி மற்றும் பஞ்சம் போன்றவற்றால் இத்திட்டம் வெற்றியடையவில்லை இதன் காரணமாக திட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டு 1966-67 1967-68 1968-1969 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு வருடாந்திர திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டன.
* மூன்றாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் கல்விக்கென சுமார் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது 11 முதல் 14 வரை குழந்தைகள் கட்டாய இலவச கல்வியை வழங்க முடிவெடுத்தல் 1 - 5 வகுப்புகள் (6 முதல் 11) வயது வரை தொடக்க கல்வி நிலை என்றும் ஆறு - எட்டு வகுப்புகள் (11 முதல் 14) வரை நடுநிலைக் கல்வி நிலை என்றும் பிரிக்கப்பட்டு கல்வி விரிவாக்கத்திற்கு குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழி செய்யப்பட்டது.
4 வது ஐந்து ஆண்டு திட்டம்:
* நான்காம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் திருமதி இந்திரா காந்தி இந்திய பிரதமராக பதவி வகித்தார் இத்திட்ட காலத்தில் 14 பெரிய வங்கிகள் அரசுடுமையாக்கப்பட்டன பாகிஸ்தானுடன் 1971இல் போர் ஏற்பட்டது.
* பங்காளதேஷ் உருவானது பொக்ரான் ஒன் அனுசக்தி சோதனை நடத்தப்பட்டது.
* வங்காளதேஷ் விடுதலைக்காக பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போருக்காக திட்ட ஒதுக்கீடு நிதி திருப்பி விடப்பட்டதால் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படவில்லை.
5 வது ஐந்தாண்டு திட்டம்:
* இந்த திட்டம் 1974 முதல் 1979 வரை ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் வேலை வாய்ப்பு பெறுகுதல் வறுமை ஒழிப்பு சமூக நீதி ஆகியவற்றை தனது திட்ட லட்சியமாகக் கொண்டது வேளாண்மை உற்பத்தி தேசிய பாதுகாப்பில் தற்சார்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்த உறுதியாக உள்ளது 1978ல் திரு மொரார்ஜி தேசாய் தலைமையில் பதவியேற்ற மத்திய அரசு ஐந்தாண்டு திட்டத்தை நிராகரித்தது 1978 மற்றும் 1989 காண உருட்டும் முறை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த முறை 1980-ல் பதவி ஏற்ற இந்திரா காந்தி அரசால் கைவிடப்பட்டது ஐந்தாவது ஐந்தாண்டு திட்ட இலக்கான 4.4 சதவீதம் என்னும் பொருளாதார வளர்ச்சி மிஞ்சப்பட்டு அஞ்சு சதவீதமாக அமைக்கப்பட்டது.
* கல்வித் துறையை பொறுத்தவரை 1284.9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது.
* நாடு முழுவதும் பொதுக் கல்வி முறையை அதாவது (5+3+2)+2+3 திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.
* இடைநிலை கல்வியை தொழிற்சார் உடையதாக ஆக்குதல்.
* தொடக்கக் கல்வியில் கழிவையும் தேக்கத்தையும் குறைத்திட முயற்சித்தல்.
* தொடக்க கல்வி வாய்ப்பை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கச் செய்தல்.
* பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துதல். கல்வியின் அனைத்து நிலைகளிலும் வேலை அனுபவத்தை கட்டாயமாக இடம்பெறச் செய்தல்.
6 வது ஐந்தாண்டு திட்டம்:
* இத்திட்ட காலமானது 1980 முதல் 1985
இத்திட்ட காலத்தில் பொருளாதார தடைகள் தளர்த்தப்பட்டன குடும்ப கட்டுப்பாடு திட்டம் தீவிரம் அடைந்தது நேருவின் சமதர்ம பாதையில் இருந்து இந்தியா விலக ஆரம்பித்தது திட்ட இலக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் அஞ்சு புள்ளி இரண்டு சதவீதம் மிஞ்சி எய்தப்பட்ட வளர்ச்சி வீதம் 5.66% ஆக அமைந்தது.
* முதல் ஐந்து ஆண்டு திட்டங்களிலும் கல்வி ஒரு சமூக சேவை என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு குறைவான திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டது. உற்பத்தி துறையான விவசாயம், மின்னு உற்பத்தி, பாசன வசதி, தொழிற்சாலை பெருக்கம், போன்றவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
* ஆனால் ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் கல்வி ஒரு முதலீடு என்ற கண்ணோட்டம் வலுப்பெற்றது கல்விக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது இதன் விளைவாய் ஆறு முதல் 14 வயதுடைய குழந்தைகளின் பள்ளி சேர்க்கை 1085 லட்சம் ஆக அதிகரித்தது.
* மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் மாணவர்களது சமூகத்திறனை அதிகரித்தல்.
* மாணவர்களிடம் அறநெறி மற்றும் பண்பாட்டு மதிப்புகளை உயர்த்துதல்.
* வயது வந்தோர் கல்விக்கும் முறைசாரா கல்விக்கும் முக்கியத்துவம் அளித்தல்.
7 வது ஐந்தாண்டு திட்டம்:
* இத்திட்டம் 1985 முதல் 1990 வரை
* இத்திட்டம் சமூக நீதிக்கும் பொருளாதார உற்பத்தி திறன் மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்தது எளியோரை வறுமையில் இருப்பதை தடுப்பது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது. வேளாண்மை முன்னேற்றம் வறுமை ஒழிப்பு திட்டங்கள் போதிய உணவு, உடை, இருப்பிடம் வளங்கள் சிறு மற்றும் குரு விவசாயிகள் வேளாண்மை உற்பத்தி திறனை அதிகரித்தல். போன்றவற்றின் மூலம் இந்தியாவில் சுதந்திர பொருளாதார நாடாக மாற்ற என்பது ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்குகள் ஆகும்.
* இத்திட்டத்தில் பள்ளிகள் எண்ணிக்கை 5,80,000 என்று உயர்ந்து காணப்படும் என்று கணக்கிடப்பட்டது. 15 முதல் 35 வரை பிரிவினர் இடையே எழுத்தறிவு போக்க முறைசாரா கல்வி ஊக்குவிக்கப்பட்டது. தொழில்நுட்ப கல்வி நவீனப்படுத்தப்பட்டது. தொலைதூரக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
8 வது ஐந்தாண்டு திட்டம்:
* இத்திட்டம் 1992 முதல் 1997 வரை
* 1990 முதல் 1992 இடையே வெளியில் மத்திய அரசியல் குழப்ப நிலை நீடித்ததால் எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தை 1990 இல் தொடங்குவதற்கு பதில் இரண்டு ஓராண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன தாரமயமாக்கல் தனியார்மயமாக்கல் உலகமயமாக்கல் என்கின்ற புதிய வழித்திட்டத்தில் பயணித்து அன்று இந்திய பிரதமர் நரசிம்மராவ் அவர்களும் நிதியமைச்சர் மன்மோகன் சிங் அவர்களும் நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய செலவாணி நெருக்கடியில் இருந்து புத்துயிர் பரச் செய்தனர். இத்திட்டத்தில் தொழிலகங்களை நவீனப்படுத்துதலும் எரிசக்தி உற்பத்தியும் முக்கியத்துவம் பெற்றன.
* கல்வித்தரத்தை உயர்த்திட தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. முதியோர் கல்வி முறை சாரா கல்வி இடைநிலை கல்வி தொழிற்கல்வி மற்றும் உயர்கல்விகளும் வளர்ச்சி பெற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
9 வது ஐந்தாண்டு திட்டம்:
* இத்திட்டம் 1997 முதல் 2002 வரை
* இந்திய விடுதலைக்கு 50 ஆண்டுகளுக்குப் பின் வாஜ்பாய் இந்திய பிரதமராக பதவி வகித்த காலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது மக்கள் அரசு பங்கேற்பு நடைமுறைக்கு வந்தது சிறப்பு திட்டங்கள் நான்கு குளங்களில் அதாவது சமூக கட்டமைப்புகள் விவசாயம், தகவல் தொழில்நுட்பம், மற்றும் நீர் கொள்கை உருவாக்கப்பட்டன.
* தேசிய நெடுஞ்சாலைகள் தங்க நாற்கர திட்டம் நாட்டின் எல்லா பகுதிகளிலும் இணைப்பதில் வெற்றி கண்டன இத்திட்டத்தின் இலக்குகளில் தொடக்கக் கல்வியிலையில் 100% மாணவர் சேர்க்கையை ஏற்றுவதும் ஒன்றாகும் என்னவென்றால் பாலின நீதிக்கு முக்கியத்துவம் அளித்தல் பெண் கல்வியை ஊக்குவித்தல் பெண்கள் அதிகாரத்தை வலுப்படுத்துதல் சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு குறிப்பாக அட்டவணை சாதியினர் அட்டவணை பழங்குடி இனத்தவர் மற்றும் பிற்பட்ட வகுப்பினை அதிகாரம் உடையவர்களாக ஆக்குதல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் 6 முதல் 14 வயதுடைய இலவச கட்டாய கல்வி அளித்தல் தொடக்க கல்விக்கும் தகவல் தொழில்நுட்ப கல்விக்கும் முக்கிய மொழிகள் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஊராட்சி நிறுவனங்களுக்கு பொறுப்புகளும் அதிகாரமும் அளித்தல் அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் இலவச பள்ளிக்கல்வி அளித்தல் இத்திட்டத்தின் வளர்ச்சி சதவீதம் அடையப்பட்ட வளர்ச்சி 5.35%.
10 வது ஐந்தாண்டு திட்டம்:
* இத்திட்டம் 2002 முதல் 2007 இத்திட்டத்தின் இலக்குகளில் முக்கியமானவை வருமாறு.
* ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தி எட்டு சதவீத மலரை எடுத்தல் வறுமை விகிதத்தை 2007 ஆம் ஆண்டுக்குள் 5 சதவீதமாக குறைத்தல்.
* புதிதாக வேலைக்கு சேருவோர் உயர்தர வேலை வாய்ப்புக்கான திறனை பெற்றிருக்க செய்தல்.
* எழுத்தறிவு மற்றும் ஊதிய விகிதத்தில் பாலின வேறுபாடு 2007 ஆம் ஆண்டுக்குள் அம்பது விழுக்காடாக குறைத்தல்.
* எழுத்தறிவு விகிதத்தை திட்ட காலத்தில் 72% ஆகவும் 2012ல் 80 சதவீதம் எனவும் உயர்த்துதல்.
* துறை ரீதியான அணுகுமுறைக்கு பதில் பிரதேச ரீதியிலான அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம் மாநிலங்களுக்கு இடையான வளர்ச்சி வேறுபாடுகளை குறைத்தல்.
* இத்திட்டத்தின் முதலீடு 9,21,291 கோடி ரூபாய்.
11 வது ஐந்தாண்டு திட்டம்:
* இத்திட்டம் 2007 முதல் 2012 வரை
* விரைவான அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி வறுமை ஒழிப்பு கல்வி மற்றும் செயல் திறன்கள் மேம்பாடு மூலம் மக்களை அதிகாரமுடையார் ஆக்குதல் பாலின சமத்துவ இன்மை குறைத்தல். சுத்தமான குடிநீர் 2009க்குள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல். வேளாண் உற்பத்தியை நான்கு சதவீத அளவும் தொழில் உற்பத்தியை 10 சதவீத அளவும் சேவை பிரிவினை பங்களிப்பை 9% அளவும் அதிகரிக்க செய்தல். மொத்த கருத்தரிப்பு விகிதத்தை 2.1 என குறைத்தல்.
12 வது ஐந்தாண்டு திட்டம்:
* இத்திட்டம் 2012 முதல் 2017 வரை
இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
இத்திட்டம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது பின்பு 2014 இல் திட்ட கமிஷன் கலைக்கப்பட்டது. திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள்.
* ஆதார் அடையாள அட்டையை எல்லா குடிமக்களும் வளங்கள் ரொக்கப் பணமான பரிமாற்றத்தை மாற்றி மின்னணு பணம் பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்துதல்.
* கருப்பு பணத்தை வெளி கொணர்தல் கூட்டுறவு மாநில கோட்பாட்டை செயல்படுத்துதல்.
தொடரும் ...... .. ..
* இத்துடன் ஐந்தாண்டு கொள்கை முடிவுற்றது. மேலும் இது போன்ற முக்கிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு நமது வலைதளங்களை பின்பற்றுங்கள்.
0 கருத்துகள்