Exchange

களப்பிரர்கள் - தோற்றம்

                           களப்பிரர்கள் - தோற்றம் 


     களப்பிரர்கள் இவர்களின் பூர்வீகம் கன்னட நாடு ஆகும்.  கன்னடக் கல்வெட்டுகளில், களவரநாடு, களவாப்பு, களபோரா போன்ற பெயர்களில் காணப்படுகின்றன.  களவரநாட்டைச் சேர்ந்தவர்கள் களவர் என்று அழைத்தனர்.  காளத்தி மலப்பகுதியில் வாழந்துவந்த மக்களும் களவர் என்றே அழைத்தனர். 

     * இந்த களவர் என்ற சொல் வட மொழியில களப்ரா என்று மாற்றம் அடைந்தது .  இது  தமிழில் களப்பிரர் என்று அழைக்கப்பட்டது.  களவர் என்பது தமிழ் இலக்கியங்களில் கள்வர் என்றாகி பின்னர் பெயர் பெற்றிருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். 

1) களப்பிரர் தோற்றம்

     தமிழக வரலாற்றிலேயே  சங்க கால சேர, சோழ, பாண்டிய, மன்னர்களின் வாரிசுகள் இறந்த பிறகு தமிழகத்தில் அரசு முறை தமிழ் பண்புகளுக்கு ஒவ்வாத ஒரு பரம்பரையினரிடம் சுமார் 3 நூற்றாண்டுகள் சிக்கித் தவித்தது தமிழகம்.  ( தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி நிறுவப்படுதல் ) கி. பி மூன்றாம் நூற்றாண்டு முதல் கி. பி. ஆறாம் நூற்றாண்டு வரை இந்த கால கட்டத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இக்காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர்கள் என்று கூறப்படுகின்றனர். 

களப்பிரர்களின் காலம் 

     களப்பிரர்கள் யார்?  அவர்கள் எங்கிருந்து எப்படி வந்தார்கள் என்ற குழப்பம் வரலார்ரறிஞர்களிடையே ஏற்ப்படுகிறது.  இதன் மூலம் பலத்த கருத்து வேறுபாடுகளும் நிலவி வருகிறது. 

2) சான்றுகள் 

      களப்பிரர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்க்கு இலக்கியங்களும், கல்வெட்டுகளும் பெரிதும் உதவியாக உள்ளன. 

* இலக்கிய ஆதாரங்கள் 

     தமிழ் நாவலர் சரிதையில் களப்பிரரைப்  பற்றிய செய்தி 154-157 வரையிலான 4 பாடல்களில் கூறுகின்றனர்.  யாப்பெருங் கழகம் என்ற இலக்கண நூலில் விருத்தியுரை நந்தி மலையில் ஆட்சி புரிந்து வந்த ஆச்சுத களப்பாளன் என்ற களப்பிர அரசனைப் பற்றிக் கூறுகிறது.  இந்த அரசன் சோழ நாட்டில் இருந்து கொண்டே தமிழக முழுவதும் ஆட்சி புரிந்தான் என்று தெரிகின்றது.  மேலும்  இந்த விருத்தியுரையில்  சேர, சோழ, பாண்டிய ஆகிய மூவந்தரும் அடிபணிந்த செய்தி உறுதிபட  தெரிகிறது. 

     பெரிய புரானத்தில் வரும் கூற்றுவநாயனார் களப்பிர மரபைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 63 நாயன்மார்களின் ஒருவரான இவரைப் பற்றி நம்பியாண்டார் நம்பி களப்பாளன் என்று கூறுகிறார். 

     கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் பூம்புகாரில் வாழ்ந்து வந்த புத்தகத்தர் என்ற தமிழ் பெளத்தர் பாலி மொழியில் விநயவிநிச்சயம் என்ற நூலை எழுதினார். இந்த நூல் சோழ நாட்டை ஆட்சிப் புரிந்து வந்த அச்சுத விக்கிராந்தன் என்ற களப்பிர மன்னனைப் பற்றிக் குறிப்பிடுகிறரர். அந்த நூலில் அந்த மன்னன் களபகுலநந்தன் என்று போற்றி கூறப்படுகிறான்.

     இவை தவிர அகநானூறு, கல்லாடம் ஆகிய நூல்களிலும் களப்பிரரைப் பற்றி சான்றுகள் உள்ளது. 

* செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆதாரங்கள் 

     களப்பிரரைப் பற்றி குறிப்பிடும் செப்பேடு சாசனங்களில் முக்கியமானவை ஆக கருதப்படுபவை வேள்விக்குடி செப்பேடுகள் ஆகும்.  பாண்டியன் பாராந்தக  நெடுஞ்சடையனின் இந்த வேள்விக்குடி செப்பேடு கடுங்கோன் என்ற பாண்டிய நாட்டு வீரன் களப்பிரரை வென்று பாண்டியர் ஆட்சியை புதிப்பித்த செய்தியை விளக்கமாக கூறுகின்றன. களப்பிரரை வென்றவன் மாக்கடுங்கோன் என்று குறிப்பிட்டு இந்த செய்தியை உறுதிபடுத்துகிறது. 

     முதலாம் பரமேஸ்வர மன்னரின் கூறம் செப்பேடு களப்பிரரை பல்லவர்கள் வென்ற செய்திகளை சொல்லுகின்றனர். சிம்ம விஷ்ணு களப்பிரரிடம் இருந்து சோழ நாட்டை மீட்டான் என்று வேலூர்பாளையம் செப்பேடும், பள்ளங்கோவில் செப்பேடும் சொல்லுகின்றன. இரண்டாம் விக்கிரமாதித்தன் என்ற சாளுக்கிய வேந்தனின் நேரூர் நன்கொடைப் பட்டயம் களப்பிரரை பற்றி கூறுகிறது. 

     காஞ்சி வைகுண்டப்  பெருமாள் கல்வெட்டில் நந்திவர்ம பல்லவ மன்னரது முடிசூட்டு விழாவிற்க்கு முத்தரயன் என்பவன் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.  இந்த முத்தரையர்களே களப்பிரர்கள் என்பது அறிஞர்கள் கருத்து ஆகும்.  

     செந்தலைத்தூண் கல்வெட்டில் காணப்படும் பெரும் பிடுகு முத்தரயன் கள்வர் கள்வன் என கூறப்படுவதால் அவன் களப்பிரருடன் இணைத்துப் பேசப்படுகிறான். திருப்புகழூர்  கல்வெட்டு நெற்குன்றம்கிளார் என்ற களப்பாள அரசனைப் பற்றி தெரிவிக்கின்றது.  மேலும், கொற்ற மங்கலம் செப்பேடுகள், வினயாதித்தனது ஹரிஹரர்  சாசனம் ஆகியவைகளும் களப்பிரைப்பற்றி  கூறுகின்றனர்.  ( களப்பிரர் ஆட்சியின் விளைவுகள் )

     * மேற்கூறப்பட்ட செப்பேடுகள் களப்பிரர்களைப் பற்றிய விரிவான செய்திகள் கூறப்படவில்லை. களப்பிரர்களால் வெளிஇடப்பட்ட கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ, நாணயங்களோ, இதுவரை ஒண்ணு கூட கிடைக்கவே இல்லை ஆதலால் மேற்க்கூறப்பட்ட ஆதாரங்கலையே நாம் அடிப்படையாக  கூறவேண்டி உள்ளது. 

              

கருத்துரையிடுக

0 கருத்துகள்