சங்க கால இலக்கியச் - சான்றுகள்
சங்க கால இலக்கியங்கள் மூலமாக பண்டையக்கால தமிழ் சமுதாயத்தைப்பற்றி நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக சங்க இலக்கியம் என்று ஏராளமான நூல்கள் குறிப்பிட்டாலும், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஆகிய இரண்டுமே சங்க கால இலக்கியங்கள் என்று அறியப்படுகிறது. இவை இரண்டும் கிருஸ்துவ சகாப்தத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சார்ந்தவை என்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு உள்ளன. முதலில் எட்டு தொகை நூல்கள்.
1) நற்றிணை
இது 400 பாடல்களை கொண்டது. சிற்ரசர்களான ஓமு, பாமு, அதிகன், நின்னன், மலையன், பாணன் ஆகியோரைப்பற்றி கூறுகின்றது. மேலும் தொண்டி, கொற்கை, மருதூர்பட்டினம், புனல்வாயில்,இரப்பையூர், குடந்தை ஆகிய ஊர்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. ஐந்து திணைகளில் வசிக்கும் மக்களின் உணவு, உடை, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் பற்றிய வரலாற்று குறிப்புகள் காணப்படுகின்றன.
2) குறுந்தொகை
பூரிக்கோ என்பவர் குறுந்தொகையை தொகுத்தவர் . இவை 402 வரிகளைக் கொண்டது. இதில் சமனர்களின்சில பழக்க வழக்கங்கள் காணப்படுகினற்றன.
3) ஐங்குறுநூறு
புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் என்ற புலவர் இதனை தோற்றுவித்தார். இது 500 வரிகளைக் கொண்டது. 5 நிலப் பாகுபாடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு நிலத்திர்க்கும் 100 பாடல்கள் இடம் பெறுகின்றது.பல பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
4) பதிற்றுபத்து
பல்வேறு புலவர்கள் சேர மன்னர்களைப்பற்றி பாடிய பாடல்களின் தொகுப்பு இது. இதில் முதல் பாடலும் கடைசி பாடலும் காணப்படவில்லை. இதில் சங்க கால சமூக பொருளாதார நிலை பற்றிய குறிப்புகளும், கொற்கை,தொண்டி,போன்றக் இடங்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.
5) பரிபாடல்
திருமால், முருகன், கொற்றவை, வைகை நதி ஆகியவை பற்றிய பாடல்களின் தொகுப்பே பரிபாடல் ஆகும். சங்க கால சமய வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவுகிறது.
6) கலித்தொகை
சங்க இலக்கியம் யாவற்றிலும் காலத்தால் பிற்ப்பட்டது என்று கருதப்படுவது கலித்தொகை. இது 250 பாடல்களைக் கொண்டது ஆகும். 5 புலவர்களின் மூலம் பாடப்பட்டது. இது 5 நிலங்களில் நடக்க கூடிய நிகழ்சிகளைப் பற்றி குறிப்பிடுகிறது. இதன் மூலம் சங்க காலத்தில் காணப்பட்ட அக வாழ்க்கையைஅறிந்து கொள்ள முடிகிறது. கண்ணன் என்ற ஆரியக் கடவுள் முதன் முதலாக இந்த இலக்கியத்தில் தான் குறிப்பிடப்படுகிறான்.
7) அகநானூறு
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற 5 வகையான நிலங்களின் தன்மையை விளக்குகிறது. அகத்துறை பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது. அகநானூறு பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியின் கீழ் இந்த நூல் தொகுக்கப்பட்டது. மேலும், மெளரியர்களின் படையெடுப்பு, தொண்டை மண்டல திரையர்கள், சங்க காலத் தமிழரின் உள்ளாட்சி நிறுவனமும், திருமண சடங்குகள் போன்ற வரலாற்று உண்மைகளும் இடம் பெற்றுள்ளன.
8) புறநானூறு
புறநானூறு சிற்றரசர்கள், சங்க கால அரசர்கள் பற்றிய செய்திகளைத் தருக்கிறது. ஒவ்வொரு பாடலிலும் அடியிலும் பாடப்படும் மன்னரின் பெயரும் பாடும் புலவரின் பெயரும் உள்ளது. தமிழர்களின் போர்த்திறன் ,கோரைத்திரன் பற்றி அறியலாம். ஆரியர்களின் ஆதிக்கம் தமிழ் நாட்டில் எந்த அளவிற்க்கு உட்புகுந்திருக்கிறது என்று நம்மால் அறியமுடிகிறது.
பத்துப்பாட்டு
பத்துப்பாட்டில் தொகுக்கப்பட்ட 10 நூல்களும் எட்டுத்தொகை நூல்கள் இயற்றப்பட்ட காலத்திலேயே பாடப்பட்டவை என்று அறிஞர்களால் கருதப்பட்டவை ஆகும்.
1) திருமுருகாற்றுப்படை
இதனைப் பாடியவர் நக்கீரர். இவர் முருகனின் திருவருளைப் பெற்று உயர்ந்தவர். முருக்கனிடம்மிருந்து தான் திருவருட் செல்வத்தை மற்றவர்களும் பெற்று பேரின்பம் அடையுமாறு அவர்களை ஆற்றுப் படுத்துவதாக அமைந்துள்ளது இந்த பாடல்கள்.
2) பெருநராற்றுப்படை
இதனைப் பாடியவர் முடத்தாம கண்ணியார். அரசன் அல்லது வள்ளல் ஒருவனிடம் பரிசில்கள் பெற்று வந்து பொருநர், மற்றொரு பெருநனை தான் பெற்று வந்த வள்ளலிடம் சென்று பரிசில் பெறுமாறு வழிப்படுத்துகிறான். பொருநராற்றுப்படையில் கரிக்கால சோழன் பற்றிய பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.
3) பெரும்பாணாற்றுப்படை
இதில் காஞ்சி மன்னன் தொண்டைமான், யாழின் வர்ணனை போன்ற செய்திகள் காணப்படுகின்றன. இதனைப் பாடியவர் நல்லூர் கடியலூர் உருத்திரங்கண்ணார் ஆவார்.
4) சிறுபாணாற்றுப்படை
இதனைப் இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் . இவர் கடையேழு வள்ளல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறரர். இப்பாடல்கள் சங்கப் பாடல்கள் பலவற்றிற்கு காலத்தால் பிற்ப்பட்டது என்று தெரிகிறது. மொத்தம் 269 வரிகளைக் கொண்டது சிறுபாணாற்றுப் படை
5) முல்லைப் பாட்டு
இதனை இயற்றியவர் நிப்பூதனார். இது பெரும்பாலும் முல்லை நிலத்தின் தன்மையைப் பற்றியும், அதில் வாழும் மக்களின் வாழ்க்கையைப் பற்றியும் விவரிக்கிறது.
6) மதுரைக் காஞ்சி
மிகவும் அதிகமான வரிகளையுடைய நூல் இது. மதுரை மாநகர் பற்றியும், அதனைச் சுற்றி வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றியும், தலையாளங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் போர் நடவடிக்கைகள் பற்றியும் இந்த நூல் குறிப்பிடுகிறது.
7) நெடுநெல்வாடை
இதன் ஆசிரியர் நக்கீரர் ஆவார். இது புறத்துறையைச் சார்ந்த மற்றுமொரு பாடல் ஆகும். நெடுநெல்வாடையில் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவான். இவனும் நக்கீரரும் சம காலத்தவர் ஆவார்.
* மேற்கண்ட ஆதாரங்கள் சங்க காலத் தமிழர்களின் எல்லா நிலைகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு சங்க காலத்தின் அரசியல், சமூகம், பொருளாதார வரலாறு பற்றி பல ஆசிரியர்களால் எழுதப்பட்டிருக்கிறது.
DOWNLOAD HERE
0 கருத்துகள்