சங்க காலம் – கல்வெட்டுச் சான்றுகள்
சங்க காலத்தைப் பற்றிய அடிப்படைச் செய்திகளை அறிந்து கொள்வதற்க்கு பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒரு நாட்டுடைய வரலாறு அந்த நாட்டில் கிடைக்கின்ற வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளன. கி.பி.7-ம் நூற்றாண்டைச் சார்ந்த அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் தன்னுடைய பாடல்களில் சங்கம் பற்றிய செய்திகளை குறிப்பிடுகிறரர். இறையனார் அகப்பொருள்பாயிரம் என்ற நூல் சங்கத்தினைப் பற்றி விரிவான செய்திகளை கொண்டிருக்கிறது. அதுதான் மூன்று சங்கங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
கல்வெட்டுச் சான்றுகள்
1)
பிராமி கல்வெட்டுகள்
இவைகள் தான் தமிழகத்தின் முதன்மை கல்வெட்டுகள் ஆகும். இவை அறிவர் என அழைக்கப்படும் சமனத் துறவிகள் தங்கிஇருந்த குகைகளில் காணப்படுகின்றன. இவைகளது காலம் கி மு.3-ம் நூற்றாண்டு ஆகும்
2)
அசோகறது
கல்வெட்டுகள்
அசோகர் காலத்து இரண்டாம் எண் குகைக் கல்வெட்டுகள் தமிழகத்தில்
5 தனி நாடுகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
அவை சோழர், பாண்டியர், சத்தியபுத்திரர்,
கேரளபுத்திரர், தாமிரபரணி ஆகியவை ஆகும். இவைகளின் காலம்
கி.மு.3-ம் நூற்றாண்டு என்று உறுதி செய்யப்படுகிறது. இவை தவிர கலிங்கத்து காரவேலரின் ஹதிகும்பா கல்வெட்டுகளிலிருந்தும் சங்க கால தமிழகத்தை
பற்றிய சில செய்திகளை அறிய முடிகிறது.
3) வேள்விக்குடி கல்வெட்டுகள்
பராந்தக நெடுஞ்சடையனின் வேள்விக்குடி கல்வெட்டுகள் சங்க
கால அரசன் பாண்டியன் முதுகுடும்பி பெருவழுதிஇடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட
பிரம்மதேய கிராமங்களைத் திரும்பவும் நெடுஞ்சடையனால் பிற்காலதில் தானமாக
வளங்கப்பட்டதை உறுதிசெய்கிறது.
4) திருக்கோவிலூர் கல்வெட்டு
இக்கல்வெட்டு
கபிலர் என்ற சங்ககாலப் புலவர் வடக்கிருந்து உயிர் விட்டதைப்
பற்றிக் கூறுகிறது. மேலும் நடுகல் அல்லது வீரக்கள்
என்பவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிடைக்கிறது. அவைகளில் கிடைக்கும் செய்திகள்
சங்க காலத்தில் காணப்படும் செய்திகளோடு ஒத்திருக்கின்றன.
5) நாணயங்கள்
சங்ககாலம் என்று வரையறுக்கக்கூடிய நாணயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மதுரைக்கு அருகில் பல ரோமானியா நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளின் ரோமானியா அரசர் அகஸ்டஸ் சீசர் காலத்தில் வெளியிடப்பட்டவை. இதன் காரணமாக ரோமானியப் பேரரசிற்கும் தமிழகத்திற்குமிடையே நிலவிவந்த வாணிபத் தொடர்பு அறியப்படுகிறது.
6) தொல்பொருள் சான்றுகள்
பாண்டிசேரிக்கு அருகில் உள்ள அறிக்கமேடு கிராமத்தில் கிடைத்துள்ள தொல்பொருள் சான்றுகள் சங்க காலத்தில் தமிழர்களுக்கும், ரோமானியர்களுக்கும்மிடையே நடைபெற்று வந்த வாணிபத் தொடர்பை வழியுறுத்துகின்றனர்.
· இவையே சங்க காலம் கல்வெட்டுச் சான்று ஆதாரங்கள் ஆகும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
Download PDF File Click Here
0 கருத்துகள்